கோலாலம்பூர்: கடந்த வாரம் முதல் இரத்த வழங்கல் மிகக் குறைவாக இருப்பதால் தேசிய இரத்த சேமிப்பு வங்கி, பொது மக்களை இரத்த தானம் செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்கிறது.
“ஒரு வார காத்திருப்பு, இரத்தப் பங்கு இன்னும் மிகக் குறைவு. தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவுங்கள்,” என்று நேற்று முகநூலில் பதிவேற்றிய சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபி இரத்தம் பாதுகாப்பான மட்டத்தில் இருப்பதையும், இந்த நேரத்தில் ஏ ரத்தத்தின் பற்றாக்குறை இருப்பதாகவும் அது கூறியுள்ளது.
இதற்கிடையில், பி வகை மற்றும் ஓ வகை இரத்தமும் மிகக் குறைவாக இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.
தகுதியான நன்கொடையாளர்களை அருகிலுள்ள இரத்த தான மையத்திற்கு வருமாறு இரத்த சேமிப்பு வங்கி கேட்டுக்கொள்கிறது.
சமீபத்தில் தடுப்பூசி போடப்பட்டவர்கள் தங்கள் இரத்த தானத்தை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.