Home நாடு பாலியல் நகைச்சுவை செய்த ஆசிரியர் இடமாற்றம்

பாலியல் நகைச்சுவை செய்த ஆசிரியர் இடமாற்றம்

574
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வகுப்பு பாடத்தின் போது தகாத பாலியல் நகைச்சுவைகளைச் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர் சிலாங்கூர் கல்வித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை விசாரித்து வருவதால், இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டோம் என்று கல்வி அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“கல்வி அமைச்சின் அடுத்த நடவடிக்கை இந்த வழக்கின் விசாரணையின் முடிவுகளைப் பொறுத்தது,” என்று அது கூறியது.

#TamilSchoolmychoice

படிவம் 5 மாணவி ஐன் ஹுஸ்னிசா சைபுல் நிஜாம் தனது பள்ளியில் உடல் மற்றும் சுகாதார கல்வி ஆசிரியர் கேலி செய்ததாகவும், தனது மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஊக்குவித்ததாகவும் கூறியிருந்தார்.