Home கலை உலகம் நடிகர் மாறன் கொவிட்-19 தொற்று காரணமாக காலமானார்

நடிகர் மாறன் கொவிட்-19 தொற்று காரணமாக காலமானார்

570
0
SHARE
Ad

சென்னை: நடிகர் மாறன் கொவிட்-19 தொற்று காரணமாக காலமானார்.

இவர், நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படத்தில் ‘ஆதிவாசி’ கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆவார். மேலும், டிஷ்யூம், தலைநகரம், வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களிலும் மாறன் நடித்திருக்கிறார்.

மாறனுக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டதையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னர், இயக்குநர்கள் தாமிரா, கே.வி. ஆனந்த், நடிகர் பாண்டு, பாடகர் கோமகன் ஆகியோர் இறந்த நிலையில் மாறனும் கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.