சென்னை: தமிழக சட்டமன்ற சபாநாயகராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, திமுக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்திருந்தார். அமைச்சர் துரைமுருகன் வழிமொழிந்தார். வேறு யாரும் விண்ணப்பிக்காததால் அப்பாவு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்காலிக சபாநாயகராக இருந்த கு.பிச்சாண்டி துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி) சட்டமன்றம் கூடியதும் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி அறிவித்தார்.