Home நாடு இந்தியாவிலிருந்து 117 மலேசியர்கள் நாடு திரும்பினர்

இந்தியாவிலிருந்து 117 மலேசியர்கள் நாடு திரும்பினர்

490
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்தியாவின் புது டில்லி மற்றும் மும்பையிலிருந்து மலேசியர்களையும் மற்றவர்களையும் திருப்பி அனுப்பும் நோக்கில் இன்று அதிகாலை 132 பேர் கே.எல்.ஐ.ஏ. விமானத்தை வந்தடைந்தனர்.

விஸ்மா புத்ராவை மேற்கோள் காட்டி பெர்னாமா, மலிண்டோ ஏர் விமானத்தில் இருந்து சிறப்பு விமானம் அதிகாலை 2 மணிக்கு கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தை அடைந்ததாகக் கூறியது.

விமானத்தில் பயணம் செய்தவர்களில் 117 மலேசிய குடிமக்கள் மற்றும் குடும்பத்தினர், குடியுரிமைப் பெற்றவர்கள் மற்றும் எட்டு புருணை நாட்டவர்களும் அடங்குவர்.

#TamilSchoolmychoice

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவின் அடிப்படையில், புருணை நாட்டினரை விமானத்தில் அரசாங்கம் சேர்த்துள்ளதாக அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரும்பி வந்த அனைவருமே மற்றும் பணியாளர்களும், சுகாதார அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட கடுமையான நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.