Home நாடு கொவிட்-19: நடைமுறைகளை மீறியதற்காக மகாதீர் மன்னிப்பு கோரினார்

கொவிட்-19: நடைமுறைகளை மீறியதற்காக மகாதீர் மன்னிப்பு கோரினார்

479
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த சனிக்கிழமை கெடா லங்காவியில் ரமலான் மற்றும் நோன்பு பெருநாள் நன்கொடைகளை விநியோகிக்கும் போது கொவிட் -19 தடுப்பு நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறியதற்காக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மன்னிப்பு கோரியுள்ளார்.

குவா, சுராவ் சுனாமி பத்து அராங்கில் நுழைவதற்கு முன்பு தனது உடல் வெப்பநிலையை பதிவு செய்யாதது போன்ற நடைமுறைகளை மீறியதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இது ஒரு தவறு. இது நடந்திருக்கக்கூடாது. நடைமுறைகளைப் பின்பற்றாததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தொடர்புடைய சட்டங்களின் கீழ் நடவடிக்கைகளை நான் ஏற்றுக்கொள்வேன். நடைமுறைகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும், ஏனெனில் இது தொற்று பரவாமல் தடுக்க முடியும்,” என்று மகாதீர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.