Home Featured தமிழ் நாடு அதிமுக அமைச்சர்கள் பற்றி விமர்சனம்: பழ.கருப்பையா கட்சியிலிருந்து நீக்கம்!

அதிமுக அமைச்சர்கள் பற்றி விமர்சனம்: பழ.கருப்பையா கட்சியிலிருந்து நீக்கம்!

913
0
SHARE
Ad

pazha-karuppiahசென்னை –  துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஆன பழ. கருப்பையா அதிமுக-வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையாவை நீக்க அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கட்சியின் கொள்கை-குறிக்கோள், கோட்பாட்டிற்கு முரணான வகையில் பழ.கருப்பையா செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

என்றாலும், சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில், ஆளும் அதிமுக அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதால் தான் பழ.கருப்பையா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடசி வட்டாரத்தில் கூறப்படுகிறது.