Home Featured நாடு இன்று முதல் பிரிம் (BR1M) உதவித்தொகை வழங்கப்படுகின்றது!

இன்று முதல் பிரிம் (BR1M) உதவித்தொகை வழங்கப்படுகின்றது!

649
0
SHARE
Ad

semak+br1mகோலாலம்பூர் – ஒரே மலேசியா உதவித் தொகை 2016 (BR1M) இன்று ஜனவரி 28 முதல் வழங்கப்படவுள்ளது.

இன்று தொடங்கி 4 தடவைகளாக அதாவது இந்த ஆண்டு ஏப்ரல் 28, ஜூன் 23 மற்றும் செப்டம்பர் 28 ஆகிய தேதிகளில், குடும்பஸ்தர்களுக்கும், மூத்த குடிமகன்களுக்கும் பிரிம் உதவிதொகை வழங்கப்படவுள்ளது என்று இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா தெரிவித்துள்ளார்.

தனித்து வாழும் 21 வயதிற்கு மேற்பட்டவர்களில், மாதம் 2000 ரிங்கிட்டிற்குக் குறைவான வருமானம் உடையவர்கள் இன்று 400 ரிங்கிட் பிரிம் உதவித் தொகையைப் பெறுவார்கள்.

#TamilSchoolmychoice

பிரிம் உதவித்தொகை பெறுபவர்கள் தங்கள் செலவுத் திட்டங்களை சரியாக அமைத்துக் கொள்ளவும், குறிப்பாக தேவையான பொருட்களை மட்டும் வாங்கவும் இது போன்று பிரித்து வழங்கப்படுகின்றது.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் 2016 பட்ஜட்டை தாக்கல் செய்த போது, பிரிம் உதவித் தொகை 2016 மற்றும் இறப்பு பலன் திட்டம் (எஸ்கேகே) தொடர்வது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, மாதம் 3,000 ரிங்கிட்டிற்குக் குறைவான வருமானம் பெறும் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட 950 ரிங்கிட்டை 1000 ரிங்கிட்டாகவும், 3001 முதல் 4000 ரிங்கிட் வரையில் மாதவருமானம் பெறும் குடும்பத்திற்கு 750 ரிங்கிட்டில் இருந்து 800 ரிங்கிட்டாகவும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.