செர்டாங், ஏப்ரல் 17 -ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படும் 95 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாகிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
பொடா சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது இந்த எண்ணிக்கை 93ஆக இருந்தது என்றும் அவர் கூறினார்.
நட்பு ஊடகங்கள், மற்றும் இதர தொடர்புகள் வழி ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு கொள்ளும் தனி நபர்கள் மற்றும் குழுக்களை காவல்துறை மிக அணுக்கமாக கண்காணித்து வருகிறது என்று சாகிட் ஹமிடி எச்சரித்தார்.
“இத்தகையவர்களை கண்காணிக்க எங்களது புலனாய்வுக் குழுவை அனுப்புகிறோம். விசாரணை இல்லாமலேயே யாரையும் கைது செய்துவிட முடியாது,” என்றார் சாகிட் ஹமிடி.
சைபர் (இணைய) குற்றங்கள் தற்போது மலேசிய காவல்துறைக்கும் ஆசியான் நாடுகளுக்கும் புதிய சவாலாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், குற்றவாளிகள் தற்போது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த தொடங்கி இருப்பதாகக் கூறினார்.