Home வாழ் நலம் பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பூண்டு!

பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பூண்டு!

1066
0
SHARE
Ad

poonduஏப்ரல் 21 – சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் அந்த பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் அதிகம்.

p63a10பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும். வயிற்று பிரச்சனைகளும் நீங்கும்.

#TamilSchoolmychoice

குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும். பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

garlic1பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் அதிகரிப்பது குறைந்து, இதய நோய் வருவது தடுக்கப்படும். வயிற்றில் புழுக்கள் இருந்தால், அதனை வெளியேற்ற,

தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, வயிற்று புழுக்களும் வெளியேறிவிடும். பச்சை பூண்டு காச நோய், நிமோனியா, நெஞ்சு சளி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளைப் போக்க உதவும்.