ஏப்ரல் 23 – உடல் எடையைக் குறைக்க பலரும் பல செயல்களைப் பின்பற்றி இருப்பார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லை. ஆனால் சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க உதவும்.
சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசம் எனும் கொழுப்பை குறைக்கும் வெதிப்பொருள் அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை அகற்றி உடல் எடையைக் குறைக்க உதவும்.
அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், அதனை குறைப்பதற்கு பலரும் பல மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். இதனால் கண்ட உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம்.
சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட் எனும் அமிலத்தை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும். தற்போதைய காலத்தில் கண்ட உணவுப் பொருட்கள், காற்று மாசுபாடு பல வழிகளில் உடலில் நுழைகிறது.
ஆனால் சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.
தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
சோம்பு தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் ஏற்படும் சுரப்பியால் சுரக்கப்படும் நீரை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம்.