குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் அதிகம்.
குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும். பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.
தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, வயிற்று புழுக்களும் வெளியேறிவிடும். பச்சை பூண்டு காச நோய், நிமோனியா, நெஞ்சு சளி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளைப் போக்க உதவும்.