கொழும்பு, ஏப்ரல் 22 – இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சேவின் சகோதரர் பசில் ராஜபட்சே இன்று அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பியுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்சே தோல்வி அடைந்ததை அடுத்து, இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பியோடினார் பசில் ராஜபட்சே.
அவர் மீது, அரசு நிதியில் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படக் கூடும் என்று கூறப்பட்டது.
#TamilSchoolmychoice
இதனால், வேறு வழியே இல்லாமல் அமெரிக்காவில் இருந்து பசில் ராஜபட்சே இன்று கொழும்பு திரும்பியுள்ளார். அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.