Home கலை உலகம் உலக அளவில் பாராட்டுகளைப் பெற்று வரும் மலேசியப் படம்!

உலக அளவில் பாராட்டுகளைப் பெற்று வரும் மலேசியப் படம்!

447
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 22 – பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ‘சினிமா ஆன் டிமாண்ட்’ என்ற நிகழ்ச்சியில் நமது மலேசியப் படமான ‘Lelaki Harapan Dunia’ – ‘உலகைக் காப்பாற்றிய மனிதன்’ தேர்வு பெற்றுள்ளது.

mwstw_02

லியூ செங் தட் இயக்கிய இந்த மலாய் திரைப்படம் ஈரான் நாட்டில் தெஹ்ரான் என்ற இடத்தில் வரும் ஏப்ரல் 25 முதல் மே 2-ம் தேதி வரை நடைபெறும் 33-வது பேஜ்ஆர் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த திரைப்படத்திற்கு 7 நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் நிதி வழங்கியிருப்பதுடன், மலேசியா, நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் துணை தயாரிப்பில் பங்குபெற்றுள்ளன.

மலேசியாவில் கடந்த நவம்பர் 1-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த திரைப்படம், கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லோகார்னோ அனைத்துலக திரைப்பட விழா மட்டுமின்றி, டொரோண்டோ, பூசான், ரோட்டர்டாம், கோதென்பர்க், ஹாங்காங் மற்றும் பல நாடுகளிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.