Home உலகம் எவரெஸ்ட் பனிச்சரிவில் பலியானோரில் கூகுள் அதிகாரியும் ஒருவர்!

எவரெஸ்ட் பனிச்சரிவில் பலியானோரில் கூகுள் அதிகாரியும் ஒருவர்!

478
0
SHARE
Ad

google executive2

காட்மாண்டு, ஏப்ரல் 27 – நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம், இந்தியாவின் வட மாநிலங்களிலும் எவரஸ்ட் சிகரத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

எவரஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட நில அதிர்வு, அங்கு பனிச் சரிவை உண்டாக்கியது. இந்த பனிச்சரிவில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர்களுள் கூகுள் அதிகாரியும் ஒருவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

#TamilSchoolmychoice

டேன் ஃபிரடின்பர்க் என்ற அந்த அதிகாரி ‘கூகுள் எக்ஸ்’ (Google X) குழுவில் பணியாற்றி வந்துள்ளார். மலையேற்றத்தில் திறமைவாய்ந்த அவர் எவரெஸ்ட் சிகரத்தின் மீது சக ஊழியர்களுடன் ஏறிக் கொண்டிருகையில் பெரிய பனிப்பாறை ஒன்று அவர்கள் மீது உருண்டு விழுந்தது. இந்த சம்பவத்தில் அவருடன் பயணித்த மற்ற மூவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், படுகாயமடைந்த ஃபிரடின்பர்க் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

‘கூகுள் ஸ்ட்ரீட் வியூ’ (Google Street View) பயன்பாட்டிற்கென கூகுள் சாகச அணி என்ற குழுவை அமைத்த ஃபிரடின்பர்க், எவரஸ்ட் சிகரத்தை 360 டிகிரி கோணத்தில் புகைப்படங்கள் எடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

கடந்த சில நாட்களுக்கு முன், மற்றுமொரு சாகசத்திற்காக அவர் தனது குழுவினருடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது. டேன் ஃபிரடின்பர்க் மரணத்தை அவரது காதலி சோபியா புஷ் மற்றும் கூகுள் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.