Home வணிகம்/தொழில் நுட்பம் காட்மாண்டு-டெல்லி விமானப் போக்குவரத்து: கட்டணத்தைக் குறைத்த ஏர் இந்தியா! 

காட்மாண்டு-டெல்லி விமானப் போக்குவரத்து: கட்டணத்தைக் குறைத்த ஏர் இந்தியா! 

509
0
SHARE
Ad

airindiaகாட்மாண்டு, ஏப்ரல் 27 – நேபாள நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் காட்மாண்டு-டெல்லி விமான பயணத்திற்கான கட்டணத்தை ஏர் இந்தியா நிறுவனம் பாதிக்கு மேல் குறைத்துள்ளது. அதேபோல், காட்மாண்டுவில் இருந்து கொல்கத்தா மற்றும் வாரணாசிக்கான விமான கட்டணங்களும் குறைக்கப்படும் என அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காட்மாண்டு-டெல்லி விமான பயணத்திற்கான கட்டணத் தொகை 14000 ரூபாயில் இருந்து 4,700 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக் குறைப்பு காட்மாண்டுவில் இருந்து கொல்கத்தா மற்றும் வாரணாசி முனையங்களுக்கும் பொருந்தும்”

மேலும், நேபாள மக்களுக்கு உதவும் வகையில் மிக முக்கியமான நிவாரணப் பொருட்களை கட்டணம் இல்லாமல் காட்மாண்டுவிற்கு எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.