Home இந்தியா ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு!

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு!

530
0
SHARE
Ad

Jayalalithaபெங்களூர், மே 8 – ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு 12-ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தீர்ப்பு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று மாலை வெளியிடபடுகிறது.

வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக கூறப்பட்ட வழக்கில்  பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா கர்நாடக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் ஜெயலலிதா  மனு மீதான விசாரணை பெங்களூரில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்தது. திட்டமிட்டப்படி 2 மாதத்தில் வழக்கு விசாரணையை நடத்தி முடித்த நீதிபதி குமாரசாமி தீர்ப்பை எழுதினார்.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் பவானிசிங் அரசு வக்கீலாக நியமனம் செய்யப்பட்டது பற்றிய சர்ச்சை எழுந்ததால் நீதிபதி குமாரசாமி தீர்ப்பை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த பவானிசிங் நியமனம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.

நீதிபதி குமாரசாமி தன் தீர்ப்பை எப்போது வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் திங்கட்கிழமை (11–ஆம் தேதி) தீர்ப்பு வெளியிடப்படலாம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.