மும்பை, மே 11 – மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல்-8ன் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 39 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அந்த அணியின் டி வில்லியர்ஸ் – கேப்டன் கோஹ்லி ஜோடி ஆட்டமிழக்காமல் 215 ரன் சேர்த்து சாதனை படைத்தனர்.
மும்பை, வாங்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் ஆடியது. அணி 20 ஓவரில் பெங்களூர் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 235 ரன் குவித்து அசத்தியது.
கோஹ்லி 82 ரன் (50 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), டி வில்லியர்ஸ் 133 ரன்னுடன் (59 பந்து, 19 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து 236 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.
#TamilSchoolmychoice
மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்து 39 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதிரடியாக 133 ரன் அடித்த டி.வில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.