Home வணிகம்/தொழில் நுட்பம் தானியங்கிக் கார் தயாரிப்பில் ஆப்பிள்  – ஃபியட் குழுமத்தின் தலைவர் உறுதி!

தானியங்கிக் கார் தயாரிப்பில் ஆப்பிள்  – ஃபியட் குழுமத்தின் தலைவர் உறுதி!

477
0
SHARE
Ad

Apple-Carகலிஃபோர்னியா, மே 12 – கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஆப்பிள் நிறுவனம் தானியங்கிக் கார்களை தயாரித்து வருவதாக பல்வேறு ஆருடங்கள் கூறப்பட்டன. எனினும், ஆப்பிள் கைக்கடிகாரங்களின் அறிவிப்பால் அவை அனைத்தும் மறக்கப்பட்டன.  ஆப்பிள் கைக்கடிகாரமும் வெளியாகி விட்டது, அடுத்ததாக ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடுகள் என்ன? என மீண்டும் எதிர்பார்ப்புகள் ஏற்படத் துவங்கிவிட்டன.

இம்முறை ஊடகங்களின் ஆருடங்களை அதிகரிக்கும் விதமாக, உலகின் ஏழாவது மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஃபியட் குழுமத்தின் தலைவர் மார்ச்சியோன்னெ, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆப்பிள் தலைவர் டிம் குக்-ஐ சந்தித்துப் பேசினார். இருவரும் நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து வழக்கம் போல் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்றாலும், மார்ச்சியோன்னெ, கார்கள் உருவாக்கத்திலும், தானியங்கிக் கார்கள் தயாரிப்பிலும் ஆப்பிள் அதிக ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்தார்.

ஆப்பிள் ஏற்கனவே ‘டைட்டன்’ (Titan) என்ற பெயரில் தானியங்கிக் கார்கள் தயாரிப்பில் ரகசியமாக ஈடுபட்டு வருவதாக ஆருடங்கள் கூறப்படும் நிலையில், ஃபியட் குழுமத்தின் தலைவர் அதனை உறுதிப்படுத்தி உள்ளார். கார்கள் தொழில்நுட்பமும், அதனை சார்ந்த துறைகளும் ஆப்பிளுக்கு புதிதல்ல. ஐஒஎஸ் தளத்தில் இயங்கும் ‘கார் ப்ளே’ (Car Play) எனும் தொழில்நுட்பத்தை ஆப்பிள் ஏற்கனவே பல்வேறு சொகுசு கார்களில் மேம்படுத்தி உள்ளது.

#TamilSchoolmychoice

அதனால் எதிர்வரும் காலத்தில்,  ஐஒஎஸ் இயங்கு தளத்தில் தன்னிச்சையாக இயங்கும் கார்களை ஆப்பிள் உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மார்ச்சியோன்னெ, தானியங்கிக் கார்கள் தயாரிப்பில் ஆப்பிளுக்கு சக போட்டியாளரான கூகுள் நிறுவனத்தின் தானியங்கிக் கார்கள் தயாரிப்பு தளத்திற்கும் சென்று ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.