Home அவசியம் படிக்க வேண்டியவை இனி கூகுள் குரோமில் இணைய பக்கங்களை ஒலி வடிவில் பகிரலாம்!

இனி கூகுள் குரோமில் இணைய பக்கங்களை ஒலி வடிவில் பகிரலாம்!

528
0
SHARE
Ad

Google-Tone-நியூ யார்க், மே 25 – இணையத்தின் வெற்றியே தகவல் பகிர்வு தான். தகவல் பகிர்வு முறைகள் நாளுக்கு நாள் நவீனத்துவம் பெற்று வரும் நிலையில், கூகுள் தனது  குரோம் உலாவியில் இணைய பக்கங்களுக்கான தகவல் பகிர்விற்காக  சிறப்பு சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது தான் ‘கூகுள் டோன்’ (Google Tone).

இந்த முறை மூலம் இணையதளங்களின் முகவரிகள் மற்றும் காணொளி கோப்புகளுக்கான பக்கங்களை ஒலி வடிவில் பகிர்ந்து கொள்ளலாம். தகவல் பகிர்வுகளிலேயே சுவாரசியமான இந்த முறை, கூகுள் குரோம் உலாவிக்கான நீட்டிப்பு சேவையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சேவையை பயன்படுத்த முதலில் உலாவியில் கூகுள் டோன் சேவையை பதிவிறக்கம் செய்து அதனை மேம்படுத்த வேண்டும். அப்படி உலாவியில் அதனை மேம்படுத்தினால் இந்த சேவை நீல நிற பொத்தானாக உலாவியின் ‘டூல்பாரில்’ (Tool Bar)-ல் தோன்றும்.

#TamilSchoolmychoice

இதனை க்ளிக் செய்வதன் மூலம் தேவையான இணையதள முகவரிகளை இணைப்பில் இருக்கும் மற்றொரு கணினியுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அப்படி க்ளிக் செய்யும் பட்சத்தில் கணினியில் சின்னதாக பீப் என்ற சத்தம் கேட்கும். கூடவே இணையதள முகவரிக்கான அறிவிப்புகளும்,  வாசகமும் அடுத்த கணினியில் எட்டிப்பார்க்கும்.

இதன் மூலம் இணைய பக்கங்களையும், முகவரிகளையும் காபி செய்து இமெயில் அல்லது பேஸ்புக்கில் பிரதி எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

https://chrome.google.com/webstore/detail/google-tone/nnckehldicaciogcbchegobnafnjkcne என்ற முகவரியில் கூகுள் டோன் சேவையை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.