Home நாடு மலேசிய-தாய்லாந்து எல்லையில் மீண்டும் சவக்குழிகள்!

மலேசிய-தாய்லாந்து எல்லையில் மீண்டும் சவக்குழிகள்!

717
0
SHARE
Ad

20150524_grave_afpகோலாலம்பூர், மே 25 – மலேசியா-தாய்லாந்து எல்லையில் மீண்டும் நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொலை செய்து புதைக்கப்பட்டவர்கள் ரோஹின்யா குடியேறிகளாக இருக்க அதிக வாய்ப்புள்ளதால், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்கனவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் அகதிகள் விவகாரம் மீண்டும் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

Part-HKG-Hkg10176429-1-1-0தாய்லாந்து நாட்டு எல்லையை ஒட்டியுள்ள மலேசிய நிலப்பரப்பில் சமீப காலமாக மியான்மர் மற்றும் வங்கதேச நாடுகளைச் சேர்ந்த அகதிகளின் சடலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னாள் சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்து 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் பாடாங் பெசாரில் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் மீண்டும் நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

mass-graveஇங்கு கொல்லப்பட்டவர்கள் ரோஹின்யா குடியேறிகள் தானா என காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக மலேசிய உள்துறை அமைச்சர் அகமட் ஷாகித் ஹமிது கூறுகையில், “கடத்தல்காரர்களின் முகாம்கள் இங்கு சுமார் 5 வருட காலமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. கொல்லப்பட்டவர்களின் சடலங்களை மீட்டு வருகின்றோம். சுமார் 17 இடங்களில் இது போன்ற புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விசாரணை முடிந்தவுடன் அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.