Home இந்தியா ஐபிஎல்: சென்னையைத் தோற்கடித்து கிண்ணத்தை மும்பை வென்றது!

ஐபிஎல்: சென்னையைத் தோற்கடித்து கிண்ணத்தை மும்பை வென்றது!

633
0
SHARE
Ad

mumbai-indiansகொல்கத்தா, மே 25 – நேற்று நடைபெற்ற பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

முதல் பாதி ஆட்டத்தில் சென்னை அணியினர் பந்து வீச மும்பை இந்தியன்ஸ் அபாரமாக விளையாடி 202 ஓட்டங்கள் வரை எடுத்தனர். 20 ஓவர்களை நிறைவு செய்த போது மும்பை ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் சென்னை அணி 20 ஓவர்களை முடித்தபோது 8 விக்கெட்டுகளை இழந்து மொத்தம் 161 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் வெற்றியாளராக மும்பை இந்தியன்ஸ் அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி ஐபிஎல் வெற்றியாளர் கிண்ணத்தை வாகை சூடியது.

Chennai Super Kings Logo with Dhoni