எனினும்,இந்தத் தீர்ப்பில் பல குளறுபடிகள் உள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும்,இவ்வழக்கைக் கையாண்ட மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா,இந்தத் தீர்ப்பை எதிர்த்துக் கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று சிபாரிசுக் கடிதம் எழுதினார்.இதனால்,மேல்முறையீடு குறித்துக் கர்நாடகா அமைச்சரவையில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
மே 21 ஆம் தேதி நடக்க வேண்டிய அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் சித்தராமையாவின் டெல்லிப் பயணத்தால் மே 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.டெல்லி சென்ற முதல்வர் சித்தராமையா இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்துக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லியிலிருந்து அவர் திரும்பியதை அடுத்து கர்நாடகா அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.இதில் ஜெயலலிதா வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.
எனவே, இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவை எதிர்பார்த்துப் பலர் ஆவலோடு காத்திருக்கின்றனர்.