ஐரோப்பிய நாடான ஸ்வீடனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆவார். அவரை தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள அர்லாண்டா விமான நிலையத்தில் அந்த நாட்டின் இளவரசி விக்டோரியா வரவேற்றார்.
அதைத் தொடர்ந்து ராயல் அரண்மனையில் ஸ்வீடன் மன்னர் கார்ல் 16 ஆவது கஸ்டாஃப் ராணி சில்வியா ஆகியோர் பிரணாப் முகர்ஜிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
அதன்பின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஸ்வீடன் பிரதமர் ஸ்டீஃபன் லோஃவென் பார்லிமென்ட் எதிர்க்கட்சித் தலைவர் அன்னா கின்பர்க் பத்ரா ஆகியோரை பிரணாப் முகர்ஜி சந்தித்து பேச உள்ளார்.
Comments