Home இந்தியா 5-நாள் அரசுமுறைப் பயணமாக ஸ்வீடன் சென்றார் பிரணாப் முகர்ஜி!

5-நாள் அரசுமுறைப் பயணமாக ஸ்வீடன் சென்றார் பிரணாப் முகர்ஜி!

479
0
SHARE
Ad

pranabஸ்டாக்ஹோம், ஜூன் 1 – இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 5 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று ஸ்வீடன் சென்றடைந்தார். இதனைத் தொடர்ந்து 2 நாள் பயணமாக பெலாரஸ் நாட்டுக்கும் அவர் செல்ல உள்ளார்.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆவார். அவரை தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள அர்லாண்டா விமான நிலையத்தில் அந்த நாட்டின் இளவரசி விக்டோரியா வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து ராயல் அரண்மனையில் ஸ்வீடன் மன்னர் கார்ல் 16 ஆவது கஸ்டாஃப் ராணி சில்வியா ஆகியோர் பிரணாப் முகர்ஜிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

#TamilSchoolmychoice

அதன்பின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஸ்வீடன் பிரதமர் ஸ்டீஃபன் லோஃவென் பார்லிமென்ட் எதிர்க்கட்சித் தலைவர் அன்னா கின்பர்க் பத்ரா ஆகியோரை பிரணாப் முகர்ஜி சந்தித்து பேச உள்ளார்.