புதுடெல்லி, ஜூன் 1 – பணத்துக்காக குழந்தைகள் மற்றும் இளைஞர்களைக் கெடுக்கும் செயலில் ஈடுபட்டதாக நடிகர்கள் அமிதாப் பச்சன், மாதுரி தீக்சித் மற்றும் பிரீத்தி ஜிந்தா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரபல ‘நெஸ்லே நிறுவன’தின் நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, ரசாயன உப்பின் அளவு அதிமகாக இருந்ததால் உத்திரப் பிரதேச மாநில அதிகாரிகள் 5 நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது இந்த வழக்கில் ஒரு அதிரடியான திருப்பமாக பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் மீது உத்திரப் பிரதேச மாநில அதிகாரிகள் புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து அந்த மூவர் மீதும் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னணி திரை நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், மாதுரி தீக்சித் மற்றும் பிரீத்தி ஜிந்தா ஆகிய மூவரும் அந்த நூடுல்ஸின் விளம்பரத்தில் நடித்து இருந்தனர்.
மேலும், அந்த நூடுல்ஸ் உடல்நலத்திற்கு நல்லது என்று இவர்கள் மூவரும் விளம்பரம் செய்துள்ளனர் என்றும் பணத்துக்காக குழந்தைகள் மற்றும் இளைஞர்களைக் கெடுக்கும் செயலில் இவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர் எனவும் வழக்கு தொடர்ந்தவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.