“நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடம் கட்டுவதில் விஷாலின் ஆர்வத்தை நான் வரவேற்கிறேன். எனினும் பல பேட்டிகளில் அவர் தவறான முறையில் இதை சித்தரித்து வருகிறார்”.
“அதே சமயம் விஷாலுக்கே நன்றாக தெரியும் நடிகர் சங்கத்திற்கான புதியம் கட்டிடம் கட்டுவதை தற்பொதைக்கு துவக்குவது முடியாத ஒன்று என்பது”.
“சில சட்டபூர்வமான வேலைகள் நடந்துவருகின்றன. இந்த பிரச்சனையில் விஷால், சங்கத்தின் ஒற்றுமையை குழைக்காமல் அமைதி காக்க வேண்டும்” என கேட்டுள்ளார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார்.
இது குறித்து விஷால் கூறும்போது; “நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டிய பிறகுதான் எனக்கு திருமணம்” என விஷால் தற்போதைய சந்திப்புகளில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.