Home நாடு சுபாங்கில் வெடிகுண்டு பீதி: பயிற்சி நடவடிக்கை என காவல்துறை அறிவித்தது!

சுபாங்கில் வெடிகுண்டு பீதி: பயிற்சி நடவடிக்கை என காவல்துறை அறிவித்தது!

644
0
SHARE
Ad

Untitledசுபாங் ஜெயா, ஜூன் 1 – சுபாங் பேரட் வணிக வளாகத்தில் இன்று காலை அதிரடியாக வந்திறங்கிய காவல்துறையினர் அந்த பகுதி முழுவதும் தடுப்பு வேலிகள் அமைத்தனர்.

பொதுமக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் போல் உடையணிந்தவர்கள் அரக்க பரக்க அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்க, போதாதா நமது இணையவாசிகளுக்கு?

அந்தக் காட்சிகளை யாரோ படமெடுத்து, “அந்தப் பக்கம் போயிராதீக.. அந்தப் பக்கம் போயிராதீக” என்பது போல், வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக எச்சரிக்கை வாசகங்களுடன் பேஸ்புக், வாட்ஸ்அப் எங்கும் பரப்பிவிட்டனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அந்த வணிக வளாகத்தில் வெடிகுண்டு கண்டறியப்படவில்லை என்றும், அந்த நடவடிக்கை காவல்துறையினருக்கு அளிக்கப்படும் வெடிகுண்டை அப்புறப்படுத்துவதற்கான பயிற்சி என்றும் சுபாங் ஜெயா ஓசிபிடி துணை ஆணையர் யாஹாயா ரம்லி அறிவித்துள்ளார்.

எனினும், இன்று நடைபெறும் இந்த பயிற்சி நடவடிக்கை குறித்து காவல்துறை அந்தப் பகுதியில் முன்பே அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

தற்போது, அது ஒரு பயிற்சி நடவடிக்கை என்பதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.