Home நாடு அன்வாருக்கு எதிரான அவதூறு வழக்கை சைபுல் மீட்டுக்கொண்டார்!

அன்வாருக்கு எதிரான அவதூறு வழக்கை சைபுல் மீட்டுக்கொண்டார்!

918
0
SHARE
Ad

anwar-saifulகோலாலம்பூர், ஜூன் 1 – பிகேஆர் ஆலோகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது அவரது முன்னாள் உதவியாளரான முகமட் சைபுல் புக்காரி அஸ்லான் தொடுத்திருந்த 50 மில்லியனுக்கான அவதூறு வழக்கை இன்று மீட்டுக்கொண்டார்.

இன்று விசாரணை நடைபெறவிருந்த இந்த வழக்கில், திடீர் திருப்பமாக சைபுல் தனது வழக்கை மீட்டுக்கொள்வதாக அவரது வழக்கறிஞர் ஸம்ரி இட்ரஸ் மூலமாக நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதனிடையே, அன்வாரின் வழக்கறிஞரான லத்தீபா கொயா, வழக்கை திரும்பப் பெற்றதற்கான காரணத்தை அவர்கள் குறிப்பிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சைபுல் கடந்த ஆகஸ்ட் மாதம் அன்வாருக்கு எதிராக இவ்வழக்கைத் தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.