புதுடெல்லி, ஜூன் 1 – 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில், கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இன்று இறுதி வாதம் தொடங்கியுள்ளது.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஒ.பி.சைனி முன்னிலையில் விசாரணை சற்றுமுன்பு தொடங்கியுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் தனது இறுதி வாதத்தை தொடங்கியுள்ளார். இறுதிக்கட்ட விசாரணை முடிந்த பின்னர், தீர்ப்புத் தேதியை நீதிபதி சைனி அறிவிப்பார் என தெரிகிறது.
இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 தனிநபர்கள் மீதும், ஸ்வான் டெலிகாம் உள்ளிட்ட 10 நிறுவனங்கள் மீதும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.