Home இந்தியா 2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு செய்தது!

2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு செய்தது!

1063
0
SHARE
Ad

புதுடெல்லி – 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில், ஸ்வான் டெலிகாம் நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் கொடுத்தாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இவ்வழக்கு விசாரணையை 6 ஆண்டுகள் நடத்திய டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017 டிசம்பர் 21-ம் தேதி, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட 19 பேரை விடுதலை செய்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை கடந்த திங்கட்கிழமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து தற்போது சிபிஐ-யும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.