Home Video “93 வயதில் கார் ஓட்டுவேன்- குதிரை சவாரி செய்வேன் – நஜிப்பையும் தோற்கடிப்பேன்”

“93 வயதில் கார் ஓட்டுவேன்- குதிரை சவாரி செய்வேன் – நஜிப்பையும் தோற்கடிப்பேன்”

1422
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தனது 93 வயது முதுமையைத் தொடர்ந்து கிண்டலடித்து வரும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது தனது பதிலடித் தாக்குதலை தனது முகநூல் பக்கத்தில் காணொளி (வீடியோ) வடிவத்தில் துன் மகாதீர் வழங்கியுள்ளார்.

“நஜிப் தொடர்ந்து எனது வயதைப் பற்றிக் குறிப்பிட்டு கேலி பேசி வருகிறார். 93-வது வயதில் என்னால் பல வேலைகளைச் செய்ய முடியும். என்னால் கார் ஓட்ட முடியும். குதிரை சவாரி செய்யவும் முடியும். நஜிப்பைத் தோற்கடிக்கவும் முடியும்” என மகாதீர் சவால் விடுத்திருக்கிறார்.

அண்மையில் கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றிய நஜிப் எந்த நாடும் ஒருவரை 93-வது வயதில் பிரதமராகத் தேர்ந்தெடுத்ததில்லை எனக் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

அதற்குப் பதிலடியாகவே தனது காணொளியை வெளியிட்டிருக்கும் மகாதீர், “நஜிப் இந்தக் கிழவனைப் பார்த்து மிகவும் பயப்படுகிறார். பல்வேறு பதில் நடவடிக்கைகளை எடுக்கிறார். ஆணவத்தோடு பேசுகிறார். எவ்வளவு உயரமானவர்களாக இருந்தாலும் விழுந்துதான் ஆகவேண்டும். நான் நஜிப்புக்கு சவால் விடுக்கிறேன். நீங்கள் பொதுத் தேர்தலில் ஏமாற்று வேலைகள் எதிலும் ஈடுபடக்கூடாது. அப்படிச் செய்தால் உங்களைத் தோற்கடித்துக் காட்டுகிறேன்” என்றும் தனது காணொளியில் மகாதீர் சவால் விடுத்துள்ளார்.

மகாதீர் மலாய் மொழியில் உரையாடும் அந்தக் காணொளியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

Pandangan saya mengenai 'orang tua 93 tahun' yang tak lekang dibibir pemimpin pemimpin BN.Video : Parti Pribumi BERSATU Malaysia

Posted by Dr. Mahathir bin Mohamad on Tuesday, March 20, 2018