Home உலகம் கத்தாரில் ஒரே வருடத்தில் 279 இந்திய தொழிலாளர்கள் மரணம்!

கத்தாரில் ஒரே வருடத்தில் 279 இந்திய தொழிலாளர்கள் மரணம்!

707
0
SHARE
Ad

salary_2209765fஇலண்டன், ஜூன் 1 – கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் கத்தார் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற 279 இந்திய கட்டிட தொழிலாளர்கள் மரணமடைந்திருப்பதாக, அனைத்துலக பொது மன்னிப்பு மன்றத்தின்  (Amnesty) ஆய்வு தெரிவித்துள்ளது.

2022 உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கு முன்பாக கத்தார் நாட்டின் துஷ்பிரயோகம் என்ற தலைப்பில்  (Promising Little, Delivering Less: Qatar and Migrant Abuse ahead of the 2022 Football World Cup) இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. 2022-ஆம் ஆண்டு கத்தாரில் நடக்கவுள்ள பிபா கால்பந்து தொடர் போட்டிக்கான கட்டமைப்பு வசதிகளைச் செய்வதற்கான கட்டிட தொழிலாளர்கள், பெரும்பாலும் இந்தியாவிலிருந்து தான் அதிகளவு சென்றிருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

qatar-construction-workersஇதுகுறித்து கத்தாரிலிருந்து வந்த ஒருவர் கூறுகையில் ”எனக்கு அங்கு, அடையாள அட்டை எதுவும் கொடுக்கப்படவில்லை. இதனால் வேறெங்கும் வெளியே செல்ல முடியாமல் கட்டுமான தளம், மற்றும் தொழிலாளர்களுக்கான நாற்றமடிக்கும் அறையிலேயே என் காலம் கழிந்துவிட்டது”.

“என் பாஸ்போர்ட் ஸ்பான்சர்களின் கையிலேயே இருக்குமென்பதால், வேறு எங்கும் சென்று வேலை தேடவும் முடியாமல் போய்விட்டது.” என்கிறார்.

கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 1000 இந்திய தொழிலாளர்கள் கத்தாரில் மரணமடைந்துள்ளனர். இந்தியா மட்டுமின்றி நேபாளத்திலிருந்து சென்ற 162 தொழிலாளர்களும் கடந்த ஆண்டு மரணம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.