Home இந்தியா “எனது தந்தை தான் எனக்கு உந்து சக்தி” – கருணாநிதி பற்றி ஸ்டாலின் உருக்கம்!

“எனது தந்தை தான் எனக்கு உந்து சக்தி” – கருணாநிதி பற்றி ஸ்டாலின் உருக்கம்!

1282
0
SHARE
Ad

MK Stalin and karunanidhiசென்னை, ஜூன் 4 – எனது தந்தை தான் எனக்கு என்று பலமாகவும், உந்து சக்தியாகவும் உள்ளார் என திமுக பொருளாளர் ஸ்டாலின் தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதி பற்றி மிக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் 92-வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திமுக தொண்டர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்த நிலையில், திமுக பிரம்மாண்டமான மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில், கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின், தனது தந்தை பற்றி கூறுகையில், “என் தந்தை தான் எனக்கு தலைவராகவும், வழிகாட்டியாகவும், ஊக்கம் அளிப்பவருமாகவும் இருந்து வருகிறார். அவர் தான் எனது பலம். அவரது 92-வது பிறந்த தினத்தில் அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.”

“தமிழகம் பெற்றெடுத்த மாபெரும் தலைவர்களில் எனது தந்தையும் ஒருவர். எனக்கு எப்போதும் மிகப்பெரிய அளவில் ஊக்கத்தை அளித்துக் கொண்டிருப்பவராக அவர் திகழ்கிறார்” என்று ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.