நமல் ராஜபக்சே வரும் 12-ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மனில் உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோற்றதைத் தொடர்ந்து மைத்ரிபால சிறிசேன புதிய அதிபரானார்.
அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ராஜபக்சே ஆட்சிக் கால ஊழல்கள் ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன. ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே கைது செய்யப்பட்டார்.
கோத்தபாய ராஜபக்சே எந்த நேரத்திலும் சிறையில் அடைக்கப்படலாம். அதேபோல் ராஜபக்சே மனைவி ஷிராந்தி மீதும் நிதி மோசடி புகார் கூறப்பட்டு அவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நமல் ராஜபக்சே, எதற்காக தமக்குச் சம்மன் அனுப்பப்பட்டு எனத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.