Home கலை உலகம் நடிகர் சங்கத் தேர்தல்: சரத்குமாருக்கு ஆதரவு திரட்டும் ராதாரவி!

நடிகர் சங்கத் தேர்தல்: சரத்குமாருக்கு ஆதரவு திரட்டும் ராதாரவி!

526
0
SHARE
Ad

????????????????????????????????????????????????????????????????????சென்னை, ஜூன் 12 – தென்னிந்திய தமிழ்ச் சினிமா நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜூலை) 15–ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இச்சங்கத்தில் தற்போது தலைவராக இருக்கும் சரத்குமார் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்து இருக்கிறார்.

இவரது அணி சார்பில் பொதுச்செயலாளராக உள்ள ராதாரவி, துணைத் தலைவர் கே.என்.காளை போன்றோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். விஷால், நாசர் அணியினரும் தேர்தலில் நிற்கத் தயாராகி வருகிறார்கள்.

இரு தரப்பினரும் தமிழகம் முழுவதும் நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். விஷால் சமீபத்தில் புதுக்கோட்டை சென்று நாடக நடிகர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டார். ராதாரவி வரும் 15–ஆம் தேதி திருச்சி சென்று நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.

#TamilSchoolmychoice

அவருடன் கே.என்.காளை, இயக்குநர் கே.ஆர்.செல்வராஜ், நடிகைள் பசி சத்யா, குயிலி, எஸ்.எஸ்.ஆர். கண்ணன் போன்றோரும் திருச்சி செல்கிறார்கள். நாடக நடிகர்களைத் தனித்தனியாகச் சந்தித்து ஓட்டு கேட்கின்றனர்.

இதற்காக அன்றைய தினம் திருச்சியில் சிறப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடக நடிகர்கள் தவறாது பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.