Home நாடு மஇகா வழக்கு தீர்ப்பின் எதிரொலி- பழனிவேல் உட்பட ஐவரும் உறுப்பியத்தை இழக்கும் அபாயம்! சட்ட வல்லுநர்கள்...

மஇகா வழக்கு தீர்ப்பின் எதிரொலி- பழனிவேல் உட்பட ஐவரும் உறுப்பியத்தை இழக்கும் அபாயம்! சட்ட வல்லுநர்கள் கருத்து!

490
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 15 – இன்று சங்கப் பதிவகத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் எதிரொலியாக, மஇகா மத்திய செயலவையின் அனுமதியைப் பெறாமலேயே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த காரணத்தினால், 5 தலைவர்களும் தங்களின் மஇகா உறுப்பியத்தை இழக்கும் அபாயம் நிலவுவதாக மஇகா வழக்கை அணுக்கமாகக் கண்காணித்து வரும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Palanivel-and-MIC

சங்கப் பதிவகம் எடுத்த முடிவுகளும், விடுத்த உத்தரவுகளும் செல்லுபடியாகும் என்றும், பழனிவேல் தேசியத் தலைவர் என்ற முறையில் ஒப்புக்கொண்ட அம்சங்களைக் கொண்டுதான் சங்கப் பதிவகம் முடிவெடுத்துள்ளது என்றும் நீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து, மஇகா சார்பில் வழக்கு தொடுத்த 5 தலைவர்களும் தங்களின் மஇகா உறுப்பியத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காரணம், நீதிமன்றம் செல்வதற்கு முன்னால் ஓர் உறுப்பினர் மத்திய செயலவையின் இறுதி முடிவைத் தெரிந்து கொள்ள வேண்டும், அவ்வாறு மத்திய செயலவையின் இறுதி முடிவுக்கு முன்பாகவோ, அல்லது மத்திய செயலவையின் அனுமதியின்றியோ நீதிமன்றம் சென்றால் அந்த உறுப்பினர் இயல்பாகவே தனது உறுப்பியத் தகுதியை இழப்பார் என மஇகா சட்டவிதிகள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

ஆனால், சங்கப் பதிவிலாகாவுக்கு எதிராக, மஇகா பெயரில் வழக்கு தொடுத்த பழனிவேல், டத்தோ சோதிநாதன், டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன், பிரகாஷ்ராவ், கே.இராமலிங்கம் ஆகிய ஐவரும் 2009 மத்திய செயலவையின் முன் அனுமதியையோ, அல்லது 2013 மத்திய செயலவையின் முன் அனுமதியையோ பெறவில்லை.

இதன் காரணமாக இவர்கள் மஇகா சட்டவிதிகளின்படி தங்களின் மஇகா உறுப்பியத்தை இயல்பாகவே இழக்கின்றார்கள் என மஇகா சட்டவிதிகளையும், இந்த மஇகா-சங்கப் பதிவிலாகா இடையிலான வழக்கையும் அணுக்கமாகக் கண்காணித்து வரும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.