Home இந்தியா லண்டனில் அம்பேத்கர் வசித்த இல்லத்தை வாங்க இந்தியா முடிவு!

லண்டனில் அம்பேத்கர் வசித்த இல்லத்தை வாங்க இந்தியா முடிவு!

498
0
SHARE
Ad

01-01லண்டன், ஜூன் 15 – லண்டனில், அம்பேத்கர் வசித்த இல்லத்தை வாங்குவதற்கான நடைமுறைகள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. லண்டன் ‘சாக் பார்ம்’ பகுதியில், மன்னர் ஹென்றி சாலையில் உள்ள, அந்த வீடு, 2,050 சதுரஅடி பரப்பில் அமைந்துள்ளது.

மூன்று அடுக்குகள் கொண்ட இந்த வீட்டில், ஆறு படுக்கை அறைகள் உள்ளன. அம்பேத்கர், 1920ல், லண்டன் பொருளாதார பள்ளியில் பயின்றபோது, இந்த வீட்டில் தங்கி இருந்தார்.

இதை, 35 – 40 கோடி ரூபாய்க்கு வாங்கி, நினைவுச் சின்னமாக்கும் முயற்சியில், மகாராஷ்டிர அரசு ஈடுபட்டுள்ளது. லண்டனில் உள்ள இந்திய துாதர், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.