மேலும் சிவகாத்திகேயனுக்கு தாத்தாவாக ராஜ்கிரண், வில்லனாக சமுத்திரகனி, நண்பனாக சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரித்திருக்கிறார். ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
‘ரஜினி முருகன்’ என்று தலைப்பு இருப்பதால் ரஜினியிடம் இத்தலைப்பு குறித்து கூறிவிடலாம் என்று முடிவு செய்தோம். அதற்காக ரஜினியை பார்க்க அனுமதி கேட்டோம். அவர் இதற்கெல்லாம் ஏன் நேரில் வரவேண்டும், செல்பேசியில் கூறுங்கள் என்று கூறினார்.
பின்னர் அவரிடம் நாங்கள் தயாரிக்கும் படத்திற்கு ‘ரஜினி முருகன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறோம். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.
அதற்குள் அவர் ஏதும் சொல்லவேண்டாம். உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று கூறி தலைப்பை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார் என லிங்குசாமி தெரிவித்தார்.