Home நாடு மஇகா விவகாரங்களில் தேமு தலையிடாது – அட்னான்

மஇகா விவகாரங்களில் தேமு தலையிடாது – அட்னான்

567
0
SHARE
Ad

tengkuகோலாலம்பூர், ஜூன் 17 – “மஇகா-வில் நிலவி வரும் பிரச்சனைகளில், தேசிய முன்னணி தலையிட விரும்பவில்லை. மஇகா சட்டவிதிமுறைகளின் படி அவர்களே பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்” என தேசிய முன்னணி பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் இன்று அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் தேசிய முன்னணி இவ்விவகாரத்தில் தலையிட்டு, தீர்வு காண முயன்ற போது அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அட்னான் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மஇகா தலைவர்களும் மற்ற மஇகா உறுப்பினர்களை பற்றி யோசித்து, ஒற்றுமையாக இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்ட அட்னான், இந்திய சமுதாயத்திற்கு கண்டிப்பாக இக்கட்சி தேவை என்றும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice