Home தொழில் நுட்பம் ஆபாசங்களைத் தடுக்க புகார் பக்கங்களை உருவாக்குகிறது கூகுள்!

ஆபாசங்களைத் தடுக்க புகார் பக்கங்களை உருவாக்குகிறது கூகுள்!

593
0
SHARE
Ad

googleகோலாலம்பூர், ஜூன் 22 – கூகுள் உலாவியில் நாம் சில இணைய தளங்களை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, இலவச இணைப்பாக சில ஆபாச பக்கங்கள் நம்மை அறியாமலே நமது திரையில் தோன்றி விடும்.

அத்தகைய பக்கங்களில் ஆபாசப் புகைப்படங்கள் மட்டுமல்லாமல் பல சமயங்களில் ஆபாச காணொளிகளும் தோன்றி நம்மை இம்சிக்கும். இதற்கு தீர்வே இல்லையா? என்று பயனர்கள் தொடர்ந்து கூகுளிடம் கேட்டு வந்தனர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் தகவல்கள் தேடுவோரின் அனுமதியில்லாமல் ஆபாசப் படங்களை வெளியிடும் இணைய தளங்களை முடக்கவும், இது தொடர்பாக புகார்களை அளிக்க தேடு தளத்தில் பிரத்யேக புகார் பக்கங்களை திறக்கவும் கூகுள் முடிவு செய்துள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இணையத்தின் வழியாக தனி நபர்கள் மீது மன ரீதியாக தாக்குதல் நடத்தி, அவர்களுக்கு தொந்தரவு அளிக்கும் இணையதளங்கள் குறித்து பயனர்கள் இந்த புகார் பக்கங்களில் தகவல் அளிக்கலாம். இதன் மூலம் அப்பக்கங்களை முடக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

எனினும், கூகுளால் ஒட்டு மொத்தமாக இத்தகைய பக்கங்களை கண்டறிவது கடினமான காரியம் என்பதால் பயனர்கள் மூலமாக அத்தகைய பக்கங்களை பட்டியலிட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் படிப்படியாக அத்தைகைய பக்கங்களை இணையத்தைவிட்டு நீக்க முடியும் என்பதே கூகுளின் எண்ணமாக உள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கூறுகையில், “பயனர்களுக்கு தேவையான தகவல்களைத் தேடும் பொழுது இணையத்தில் இருந்து தேடல் தொடர்பான ஒட்டுமொத்த தகவல்களையும் தரவேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அத்தகைய சூழலில் பயனர்களுக்கு விரோதமாக சில தளங்கள் வரத் தான் செய்யும். அதனைத் தடுக்க நாங்கள் தற்போது பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

உலகளாவிய அளவில் பாலியல் துன்புறுத்தல்களும், வன்முறைகளும் அதிக அளவில் ஏற்படுவதற்கு இணையம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கூகுள் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களும், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களும் ஆபாசத்திற்கு எதிராக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.