Home நாடு ம.இ.கா-வில் நிலவும் குழப்பங்களுக்குப் பழனிவேல் பொறுப்பேற்க வேண்டும் – தெங்கு அட்னான்

ம.இ.கா-வில் நிலவும் குழப்பங்களுக்குப் பழனிவேல் பொறுப்பேற்க வேண்டும் – தெங்கு அட்னான்

564
0
SHARE
Ad

adnanபெட்டாலிங் ஜெயா, ஜூன் 22 – ம.இ.கா-வில் நிலவி வரும் குழப்பங்களுக்கு அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் பொறுப்பேற்க வேண்டும்.

அதை விடுத்து மற்றவர்களை குறைகூறுவதன் வழி பிரச்சனையை திசை திருப்பக்கூடாது என்று தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் கூறினார்.

மேலும், அவர் கூறியதாவது: “நாங்கள் இதை சகித்துக்கொள்ள மாட்டோம். ம.இ.கா உறுப்பினர்கள் ஆர்.ஓ.எஸ்-சில் புகார் செய்தார்கள். அதைத் தொடர்ந்து 2009-ஆம் ஆண்டு மத்திய செயலவை, 2012 பேராளர் பட்டியலின் அடிப்படையில், கட்சியின் மறு தேர்தலை நடத்தும் படி பழனிவேலுவிற்கு ஆலோசனைக் கூறியது”.

#TamilSchoolmychoice

” நீதிமன்றமும் இதனை ஒப்புக்கொண்டது. அதைத்தான் பழனிவேலுவும் செய்யவேண்டும்” என்று தெங்கு அட்னான் அறிவுறுத்தினார்.