சமீப காலமாக சிறு தானியவகைகளான கம்பு, ராகி, சோளம் போன்றவற்றை பயன்படுத்துவது நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது.
சிறு தானியங்களில் பல இருந்தாலும் சோளம் முதன்மையான உணவுப் பொருளாக கருதப்படுகிறது. சோளம் ஒரு அருமையான உணவுப் பொருள்.
பார்லி அரிசிக்கு நிகரான சத்துக்கள் இதில் உள்ளன. கோதுமையில் உள்ள புரதச் சத்துக்கள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளன. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.
கோதுமையில் உள்ள புரதச்சத்தை விட சோளத்தில் உள்ள சத்து சிறப்பு வாய்ந்தது. சோளம் உடலுக்கு நல்ல பலத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியதாகும்.
ஆராய்ச்சிகள் மூலம சோளத்தில் உள்ள நார்ச்சத்து ஆக உடலில் மாற்றப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இது, குடலுக்கு சத்தை கொடுத்து குடல் புற்றுநோயை தடுக்கக்கூடியது.
நல்ல கண் பார்வைக்கு மக்காசோளம் சிறந்தது. மக்காசோளம் இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கக் கூடியது.