Home நாடு பழனிவேலுவின் இடைக்காலத் தடை வழக்கு ஜூலை 6ஆம் தேதியே நடைபெறும்!

பழனிவேலுவின் இடைக்காலத் தடை வழக்கு ஜூலை 6ஆம் தேதியே நடைபெறும்!

455
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 26 – எதிர்வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் சங்கப் பதிவிலாகாவுக்கு எதிரான இடைக்காலத் தடை உத்தரவு கோரும் வழக்கும், முன்கூட்டியே ஜூலை 6ஆம் தேதியே நடைபெறும் எனக் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

palanivel540px_540_361_100மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கின் தீர்ப்பு மீது இடைக்காலத் தடையுத்தரவு பெறும் முயற்சியில் பழனிவேல் உள்ளிட்ட நால்வரும் நேற்று தோல்வியடைந்தனர். இருப்பினும் வழக்கின் முக்கியத்துவம் கருதி எதிர்வரும் ஜூலை 6ஆம் தேதியே இரு தரப்பினரின் வாதப் பிரதிவாதங்களையும் முழுமையாகச் செவிமெடுக்கப்போவதாக நீதிபதி டத்தோ அஸ்மாபி முகமட்  நேற்று அறிவித்தார்.

இது தொடர்பாகப் பழனிவேல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு கோரும் மனுவை நீதிபதி டத்தோ அஸ்மாபி முகமட் நேற்று வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

#TamilSchoolmychoice

முன்னதாகப் பழனிவேல் தரப்பு கோரியபடி இடைக்காலத் தடை விதிக்கும் விசாரணையின் போது, சங்கப் பதிவகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு வாதங்களை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

சங்கப் பதிவகத்தின் முடிவுக்குத் தடையுத்தரவு கோரும் மனு மீதான முறையான விசாரணை ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது என மூத்த கூட்டரசு வழக்கறிஞர் (counsel) அமர்ஜித் சிங் கூறியதாகப் பெர்னாமா செய்தி தெரிவிக்கிறது.

எனினும் இடைக்காலத் தடைவிதிக்கக் கோரி பழனிவேல் உள்ளிட்ட 4 பேர் மனுத்தாக்கல் செய்திருந்ததாகவும், இவ்விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி, விசாரணைத் தேதியை ஜூலை 6ஆம் தேதிக்கு நீதிபதி மாற்றியதாகவும் அமர்ஜித் கூறினார்.

ஜூன் 15ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்ததையடுத்து பழனிவேல், மஇகா உதவித் தலைவர்கள் டத்தோ சோதிநாதன், டத்தோ பாலகிருஷ்ணன், மஇகா முன்னாள் தலைமைச் செயலாளர் பிரகாஷ் ராவ் ஆகிய நால்வரும் அந்த உத்தரவுக்குத் தடைவிதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் இடைக்காலத் தடை பெறும் முயற்சியில் நால்வர் தரப்புக்கு நேற்று தோல்வி கிடைத்துள்ளது.