Home இந்தியா இந்தியத் துணை ராணுவப் படையினருக்குக் கட்டாயம் யோகா பயிற்சி – மத்திய அரசு!

இந்தியத் துணை ராணுவப் படையினருக்குக் கட்டாயம் யோகா பயிற்சி – மத்திய அரசு!

615
0
SHARE
Ad

tight-security34-600புதுடெல்லி, ஜூன் 30 – துணை ராணுவப் படையினருக்கு யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படை, தொழில் பாதுகாப்புப் படை உள்பட 6 பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள், யோகா பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

யோகா பயிற்சி வகுப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அந்த ஆறு படைப் பிரிவுகளின் தலைமைகளுக்கு உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

PFI1இந்தியப் பாரம்பரியத்தின் மதிப்பிட முடியாத பரிசாக இருக்கும் யோகாவை, தினசரி பயிற்சி மூலம் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை உள்ளிட்ட 6 படை பிரிவுகளில் 10 லட்சம் வீரர்கள் பணியாற்றுகின்றனர்.