Home கலை உலகம் நடிகர் சங்கத்தில் 60 கோடி ஊழல் – நடிகர் எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டு!

நடிகர் சங்கத்தில் 60 கோடி ஊழல் – நடிகர் எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டு!

635
0
SHARE
Ad

sarath S V Sekar 2சென்னை, ஜூன் 30 – நடிகர் சங்கக் கட்டிடத்தில் 60 கோடிரூபாக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் கோபத்துடன் கூறியுள்ளார். மன்னார்குடி இயல், இசை, நாடகம் மன்ற நிகழ்சிக்கு வந்திருந்த எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“நடிகர் சங்கக் கட்டிடத்தை வாடகைக்கு விட்டதன் மூலமாக 60 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் போலி உறுப்பினர்களை அதிகமாகச் சங்கத்தில் சேர்த்துள்ளனர்”.

“எந்த ஒரு முடிவு என்றாலும் சரத்குமாரும், ராதாரவியும் சேர்ந்து தனித்து முடிவுகளை எடுத்துள்ளனர்.  சங்கத்தில்  9 பேர் நிர்வாகக் குழுவில் இருக்கின்றனர் என்பதை அவர்கள் நினைத்துகூடப் பார்ப்பதில்லை”.

#TamilSchoolmychoice

“எந்த ஒரு செயல்பாடையும் முறையாக வரைமுறைப்படுத்தப்படவில்லை. அத்தனை ஊழல்களையும் மறைப்பதற்காகவே மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டிபோடுகிறார்கள்” என்று கூறினார் எஸ்.வி.சேகர்.