Home உலகம் புவி ஈர்ப்பு விசையால் பூமியில் இன்று ஒரு வினாடி அதிகமாக இருக்கும் – நாசா விஞ்ஞானி!

புவி ஈர்ப்பு விசையால் பூமியில் இன்று ஒரு வினாடி அதிகமாக இருக்கும் – நாசா விஞ்ஞானி!

689
0
SHARE
Ad

earth-timeநியூயார்க், ஜூன் 30 – புவிஈர்ப்பு விசை காரணமாக பூமியில் இன்று ஒரு வினாடி அதிகமாக இருக்கும் என்று நாசா விஞ்ஞானி தெரிவித்துள்ளார். பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவர 24 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். ஒரு நாள் என்பது 86 ஆயிரத்து 400 வினாடிகள் ஆகும்.

ஆண்டுக்கு ஆண்டு பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதாக நாசா விஞ்ஞானி டேனியல் மேக்மிலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

“பூமி, சந்திரன், சூரியன் இடையே புவிஈர்ப்பு விசை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் குறைகிறது”.

#TamilSchoolmychoice

“இதனால், பூமி தன்னைத்தானே சுற்றிவர 86,400.002 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு நாளும் இவ்வாறு உள்ள கூடுதலான நேரம் பல ஆண்டுகளாகச் சேர்த்துக் கணக்கிடும்போது அது ஒரு வினாடி ஆகிறது”.

“எனவே, இன்று அல்லது நாளைய (ஜூன் 30 அல்லது டிசம்பர் 31–ஆம்) தேதிகளில் லீப் வினாடி கணக்கிடப்படும். இந்த ஆண்டு ஜூன் 30–ஆம் தேதி அதாவது இன்று (செவ்வாய்க்கிழமை) லீப் வினாடி வருகிறது”.

“சாதாரண நாட்களில் உலக ஒருங்கிணைப்பு திட்ட நேரம் 23:59:59 முடிவடைந்தவுடன் அடுத்த நாள் 00:00:00 எனத் தொடங்கும். ஆனால் இன்று 23:59:60 என கணக்கிடப்பட உள்ளது. அதன் பிறகே அடுத்த நாள் தொடங்குகிறது. அதன்படி இன்று ஒரு வினாடி அதிகமாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.