கொழும்பு,ஜூலை1- இலங்கைப் பாராளுமன்றத்தைச் சமீபத்தில் அதிபர் சிறிசேனா கலைத்ததை அடுத்து, ஆகஸ்டு 17-ந்தேதி அங்குப் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட ராஜபக்சே விரும்பினார். ஆனால், இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் அவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அதிபர் சிறிசேனா மறுத்துவிட்டார்.
இந்நிலையில், ஹம்பன்தோட்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜபக்சே இலங்கைப் பிரதமர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
ஆனால், எந்தக் கட்சி சார்பில் போட்டி என்பதை அவர் அறிவிக்கவில்லை.
இதற்கிடையே இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயகாவும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.