Home கலை உலகம் கமல் விரும்பிப் பார்த்த இந்திப்படம்!

கமல் விரும்பிப் பார்த்த இந்திப்படம்!

551
0
SHARE
Ad

kamalசென்னை,ஜூலை 1- தேசிய விருது பெற்ற இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கியுள்ள இந்திப்படம் கவுர் ஹரி தஸ்தான் – தி ஃபிரீடம் ஃபைல். இது ஒரியா சுதந்தரப் போராட்டவீரரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படம்.

வினய் பதக், கொன்கனா சென் சர்மா, திவ்யா தத்தா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

சுதந்தரப் போராட்ட வீரரைப் பற்றிய படம் என்பதால், இந்தப் படத்தைப் பார்க்க கமல் விருப்பப்பட்டார்.

#TamilSchoolmychoice

இப்படத்தை இயக்கிய ஆனந்த், கமலுடன் இணைந்து பாபநாசம் படத்தில் நடித்துள்ளார். அவரிடம் கமல் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

கமலுடைய வீட்டிலுள்ள தியேட்டரில் ‘கியூப் சர்வர் புரொஜக்சன்’ வசதியிருப்பதால், உடனே அவருக்காக அப்படத்தைச் சிறப்பாகத் திரையிட்டுக் காட்ட ஏற்பாடு செய்தார் ஆனந்த் மகாதேவன்.