சிவகார்த்திகேயன் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, அவரது அடுத்த படத்திற்குப் பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
ஏ.எம்.ஸ்டூடியோஸ் என்கிற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கிறார். இந்தப் படத்தைத் தயாரிக்கும் ராஜா சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பராவார்.
தயாரிப்பாளரைப் போல் இயக்குநரும் புதியவர் தான். அவர் பெயர் பாக்கியராஜ் கண்ணன்.
இவர்கள் இருவரைத் தவிர மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் பிரபலமானவர்கள் எனபது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் வருமாறு:
ஒளிப்பதிவு – பி.சி. ஸ்ரீராம்,
இசை – அனிருத்,
சவுண்ட் டிசைனிங் – ரெஸூல் பூக்குட்டி,
மேக்அப் – ‘ஐ’ படத்தில் பணியாற்றிய ‘வீடா’ நிறுவனத்தைச் சேர்ந்த சீன் ஃபுட்,
படத்தொகுப்பு – ஆண்டனி ரூபன்,
கலை இயக்குநர் – முத்துராஜ்,
சண்டைப் பயிற்சியாளர் – அனல் அரசு,
ஆடை வடிவமைப்பாளர் – அனு பார்த்தசாரதி.
கதாநாயகி யார் என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
இப்படத்தைப் புதியவரான ராஜா பெயரில் சிவகார்த்திகேயனே தயாரிப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.